சுசீந்திரம் தேர் திருவிழா - சரண கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்

சுசீந்திரம் தேர் திருவிழா - சரண கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்
X

சுசீந்திரம் கோவில் தேர் திருவிழா

ஆயிரக்கணக்கான பக்தர்களின் சரணகோஷம் முழங்க சுசீந்திரம் தேர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது .

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் அமைந்துள்ள தானுமாலயன் சுவாமி கோவில்.தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவ ஆலயங்களில் ஒன்றாகவும், 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகவும் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் ஒரே கருவறையில் ஒரே சிற்பத்தில் அமர்ந்து காட்சி தரும் கோவிலாகவும் காணப்படுகிறது

இந்த கோவிலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற மார்கழி பெரும் திருவிழா கடந்த 11 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் மக்கள் மார் சந்திப்பு, ரிஷப வாகன பவனி, கருட வாகன பவனி, பரங்கி வாகன பவனி என பல்று நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. அதன்படி தமிழகத்தில் இரண்டாவது பெரிய தேரை கொண்ட இந்த கோவிலில் நடைபெற்ற தேரோட்ட நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரளாவை சேர்ந்த பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு திருதேரை வடம் பிடித்து இழுத்தனர்.

முன்னதாக விநாயகர் தேரை சிறுவர்களும், அம்மன் தேரை பெண்களும், சுவாமி தேரை அனைத்து தரப்பினரும் அரோஹரா கோஷம் முழங்க இழுத்தனர். தேரோட்ட நிகழ்ச்சியில் புதுமண தம்பதிகள் கலந்து கொண்டு தரிசனம் செய்தால் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பது காலங்காலமாக இருந்து வரும் நம்பிக்கை.

அதன்படி இன்று நடைபெற்ற தேரோட்ட நிகழ்ச்சியில் ஏராளமான புதுமண தம்பதிகளும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேரோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு சுசீந்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். மேலும் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பெண்களுக்கு சேப்டி பின்னை பெண் போலீசார் வழங்கினர்.

முன்னதாக நடைபெற்ற பூஜைகளில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி உட்பட பலர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil