கன்னியாகுமரியில் ஆட்டோவில் மதுபானம் கடத்திய 3 பேர் கைது

கன்னியாகுமரியில் ஆட்டோவில் மதுபானம் கடத்திய 3 பேர் கைது
X
குமரியில், ஆட்டோவில் மதுபானம் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டதோடு, ஆட்டோ மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த ஆரல்வாய் மொழி பகுதியில், ஆட்டோவில் மது பாட்டில்கள் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதன் அடிப்படையில், போலீசார் தீவிர வாகனச் சோதனையை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் வந்த ஆட்டோவை சோதனை செய்த போது அதில் 35 மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து ஆட்டோவில் இருந்த தோவாளை பகுதியை சேர்ந்த ராமையா, அருணாச்சலம், பழனி ஆகியோரை கைது செய்ததோடு ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மேலும் ஆட்டோவில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 35 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
அந்நியன் மாதிரியே அட்டகாசமான ஒரு படம்.. ஆனா அங்கதான் டிவிஸ்ட்.