குமரியில் டாக்டர் வீட்டில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளை

குமரியில் டாக்டர் வீட்டில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளை
X

லாக்கர் திறக்கப்பட்டு, நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 

குமரியில், டாக்டர் வீட்டின் லாக்கரை திறந்து ரூபாய் 30 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் சானல் கரையை சேர்ந்தவர் டாக்டர் ஆபிரஹாம் ஜோயல் ஜேம்ஸ். இவர் நேற்று, ஆசாரிப்பள்ளம் காவல் நிலையில் புகார் ஒன்று கொடுத்துள்ளார்.

அதில், தனது வீட்டில் நகை மற்றும் பணம் ஆகியவற்றை வீட்டில் உள்ள லாக்கரில் பாதுகாப்பாக வைத்திருந்ததாகவும், சில நாட்களாக லாகரின் சாவி காணாமல் போன நிலையில், அது தேடி கிடைக்காததால், நம்பர் லாக் மூலம் லாக்கரை திறந்தோம்.

பின்னர் பார்த்தபோது அதில் இருந்த 4 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் 30 பவுன் நகை ஒரு வைர நெக்லஸ் ஆகியவைகளை யாரோ கொள்ளையடித்து விட்டு மீண்டும் லாக்கரை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். இவற்றின் மொத்த மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாய் இருக்கும் என புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக, வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சமீபத்தில் வீட்டிற்கு வந்த நபர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!