பொதுமக்கள் பயன்படுத்தி வரும் இடத்தை இரும்பு வேலி போட்டு அடைத்த வனத்துறை

பொதுமக்கள் பயன்படுத்தி வரும்  இடத்தை இரும்பு வேலி போட்டு அடைத்த வனத்துறை
X

வேலி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்கள் 

குமரியில் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் இடத்தை இரும்பு வேலி போட்டு அடைத்த வனத்துறையினருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகாவிற்கு உட்பட்ட தடிகாரங்கோணம் பேரூராட்சி பகுதியில் மிகவும் நெறுக்கமாக சுமார் 1500 க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் அங்கு காலி மைதானம் ஒன்றும் அமைந்துள்ளது, இந்த மைதானத்தை பல தலைமுறையாகவே அங்குள்ள மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த மைதான பகுதி வனத்துறைக்கு சொந்தம் என தெரிவித்த வனத்துறையினர், மைதானத்தை சுற்றிலும் இரும்பு வேலி அமைத்து இருந்தனர். ஆனால் இந்த இடம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் கடந்த காலத்தில் இரும்பு வேலி அகற்றப்பட்டது.

இந்நிலையில் தற்போது மீண்டும் வனத்துறையினர் அப்பகுதி மக்களின் முக்கிய பிரதான இடமாக விளங்கும் மைதானத்தை சுற்றி இரும்பு வேலி அமைத்துள்ளனர்.

இந்த விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிடுவதோடு அப்பகுதி மக்களின் உரிமையை கருத்தில் கொண்டு வனத்துறையினரால் மைதானத்தில் போடப்பபட்ட இரும்பு வேலியை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தினர்.

இதனிடையே தடிகாரங்கோணம் பஞ்சாயத்து தலைவர் உள்பட அப்பகுதி அனைத்து கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் இணைந்து கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அரவிந்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Tags

Next Story