மலை அடிவாரத்தில் மணல் கொள்ளை - நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கோப்பு படம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனிம வளங்கள் தொடர்ந்து அழிக்கப்பட்ட நிலையில் அரசு உத்தரவுப்படி மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட கடும் நடவடிக்கை காரணமாக கனிம வளங்கள் பாதுகாக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக பூதப்பாண்டி பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையுடன் இணைந்து காணப்படும் தாடக மலை பகுதியில் மீண்டும் சமூக விரோத கும்பல் தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது. மணல் கொள்ளை நடைபெறும் இடத்தின் அருகே ஊர் மக்கள் யாரும் செல்ல முடியாத அளவிற்கு மக்களை சமூக விரோத கும்பல் மிரட்டுவதாக குற்றம் சாட்டிய பொதுமக்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி இருப்பதாக குற்றம் சாட்டினர்.
மேலும் மணல் எடுத்து அந்த இடம் ஆழமான குழியாக மாறி உள்ள நிலையில் அதில் வன விலங்குகள் விழுந்து உயிர் பலி ஏற்படுவதாகவும் தெரிவித்தனர். மணல் கொள்ளை வெட்ட வெளிச்சமாக நடந்து வரும் நிலையில் இதனால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படுவதாக தெரிவித்த பொதுமக்கள் அரசும் காவல்துறையும் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu