மாஸ்க் அணியாமல் வலம் வந்தவர்களுக்கு அபராதம்
உலகம் முழுவதும் ஆட்டி படைத்த கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தமிழகம் உட்பட இந்தியாவிலும் அதிகரித்த நிலையில் தமிழகஅரசு எடுத்த கடும் முயற்சியால் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.இந்நிலையில் ஊரடங்கு தளர்வுகள் காரணமாகவும் தேர்தல், திருமணங்கள் உட்பட பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
அதன்படி வீட்டை விட்டு வெளியே வரும் அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது, வர்த்தக நிறுவனங்கள், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கிருமி நாசினிகள் உபயோகப்படுத்துவது குறித்து விழிப்புணர்வை சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை செய்து வருவதோடு அரசு உத்தரவை மீறி அலட்சியத்துடன் மாஸ்க் அணியாமல் வலம் வரும் நபர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர், மேலும் அபராதம் விதிக்கப்படும் நபர்களுக்கு மாஸ்க் அணிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu