குமரியில் 12 ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் - மிஸ் பண்ணாதிங்க

குமரியில் 12 ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் - மிஸ் பண்ணாதிங்க
X

கோப்பு படம்

வரும் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, குமரியில் பிரம்மாண்ட கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

தமிழக அரசின் உத்தரவின்படி, வரும் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அவ்வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் அன்றைய தினம், 600க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற இருக்கின்றன.

இதில், நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 100 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. ஆகையால் , பொதுமக்கள் இதனை தவறாமல் பயன்படுத்தி, கொரோனா தடுப்பூசியினை செலுத்தி கொள்ள வேண்டும்.

தனிநபர் பாதுகாப்பு என்பது, தேசத்தின் பாதுகாப்பு ஆகும். எனவே, அனைவரும் அச்சமின்றி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என , மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்