குமரியில் வெள்ள அபாய எச்சரிக்கை - 70 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு

குமரியில் வெள்ள அபாய எச்சரிக்கை - 70 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு
X
குமரியில் கனமழையால் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் சுசீந்திரம் தக்கலை மார்த்தாண்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டம் முழுவதும் கனமழை பெய்துள்ளது. நேற்று, மாவட்டத்தில் அதிகபட்சமாக சுருளக்கோடு பகுதியில் 150 மிமீ மழையும், கன்னிமார் பகுதியில் 136 மிமீ மழையும் பதிவாகி உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் தொடர்ந்து நீடித்து வரும் கனமழையால், மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளில் பேச்சிப்பாறை பெருஞ்சாணி சிற்றாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம், தற்போது 43 அடியாகவும் 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் தற்போது 72 அடியாகவும் உயர்ந்துள்ளது.

இந்த அணைகளில் இருந்து வினாடிக்கு 2,700 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கோதையாறு திற்பரப்பு அருவி தாமிரபரணி ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த தண்ணீரானது விளைநிலங்களுக்குள் புகுந்ததால், சுமார் 70 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்யப்பட்டுள்ள வாழை விவசாயம் பாதிப்பை சந்தித்துள்ளது.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil