தொடர் தடுப்பூசி தட்டுப்பாடு - குமரியில் 70 சதவிகித மக்கள் ஏமாற்றம்.

தொடர் தடுப்பூசி தட்டுப்பாடு - குமரியில் 70 சதவிகித மக்கள் ஏமாற்றம்.
X
தொடர் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக குமரியில் 70 சதவிகித மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது குறைந்து வந்தாலும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1896 ஆக உள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக குமரி மாவட்டத்தில் தொடர்ந்து தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன, ஆனால் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கிய நாள் முதல் இருந்துவரும் குளறுபடிகள் இருந்து வருகிறது.

மேலும் தடுப்பூசிகள் பற்றாக்குறை காரணமாகவும் எத்தனை மையங்கள் மற்றும் தடுப்பூசி இருப்பு குறித்த விவரங்கள் முழுமையாக அறிவிக்கப்படாததாலும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் வாடிக்கையாக உள்ளது.

குமரி மாவட்டத்தை பொருத்தவரை தடுப்பூசி செலுத்தி கொள்வதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக கடந்த 4 நாட்களுக்கு முன்பு வரை 70 முதல் 90 மையங்களில் நடைபெற்று வந்த சிறப்பு முகாம்கள் தற்போது 10 முதல் 40 மையங்களில் மட்டுமே தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனிடையே இன்று 4900 கோவிஷீல்டு தடுப்பூசிகள் மற்றும் 2500 கோவாக்சின் தடுப்பூசிகள் வந்ததாக அறிவித்துள்ள மாவட்ட நிர்வாகம் மாவட்டம் முழுவதும் 40 சிறப்பு மையங்களில் தடுப்பு ஊசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் எந்தெந்த மையங்களில் எத்தனை தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன என்பதை அறிவிக்காததால் அனைத்து மையங்களிலும் பெருமளவில் பொதுமக்கள் கூட்டம் காணப்பட்டது சமூக இடைவெளி இன்றி கூடிய பொதுமக்களின் கூட்டத்தால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

நாகர்கோவிலில் உள்ள எஸ்.டி இந்து கல்லூரியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 500 தடுப்பூசி மட்டுமே இருப்பில் உள்ள நிலையில் அங்கு 3000க்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளி இன்றி கூடியதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

கா லையில் சிறப்பு முகாமிற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் 250 டோஸ் டோக்கன் மட்டுமே உள்ளதாக அறிவித்ததால் பல மணி நேரமாக நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பலர் ஏமாற்றத்துடன் ஆத்திரமடைந்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், தொடர்ந்து மக்களை ஏமாற்றும் செயலை மாநகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும் ஆன் லைன் ரெஜிஸ்டிரேஷன் முறையை கொண்டு வந்து தடுப்பு மருந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இரவு 2 மணிக்கே வரிசையில் நிற்க வேண்டும் என அதிகாரிகள் கூறுவதாகவும் பெண்கள் வயதானவர்களை எப்படி நடு இரவில் அழைத்து வர முடியும் என கேள்வி எழுப்பி உள்ள பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்

Tags

Next Story
ஜலதோஷத்துக்குலாமா டாக்டர் கிட்ட போறீங்களா..? இனிமே இத பண்ணுங்க..!