குமரியில் கால்நடை உதவியாளர் பணிக்கு நேர்காணல்: குவிந்த பட்டதாரி இளைஞர்கள்

குமரியில் கால்நடை உதவியாளர் பணிக்கு நேர்காணல்: குவிந்த பட்டதாரி இளைஞர்கள்
X

நாகர்கோவிலில் நடந்த கால்நடை உதவியாளர் பணி நேர்காணலுக்கு இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து காெண்டனர்.

ஆடு, மாடு பிடிக்கணும், சைக்கிள் ஓட்டணும் என்ற கால்நடை பணிக்கு நடைபெற்ற இன்டர்வியூவுக்கு ஏராளமான பட்டதாரிகள் வந்ததால் பரபரப்பு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் காலியாக உள்ள 48 கால்நடை உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டது.

இந்த வேலைக்கு குமரிமாவட்டத்தில் 5906 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதற்கான நேர்முகத் தேர்வு நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் தொடங்கியது. இதில் பள்ளிப்படிப்பு மட்டுமே படித்தவர்களுக்கு இணையாக பட்டதாரிகள் பலரும், கையில் தங்களது கல்விசான்றிதழ் சகிதம் கலந்துகொண்டனர். ஆடு பிடித்தல், மேய்ச்சல் உள்ளிட்ட பணிகளுக்கு பட்டம் பெற்ற பட்டதாரிகள் கலந்து கொண்டது ஆச்சரியத்தையும், வேலையின்மையின் மீதான கள யதார்த்தத்தையும் உணர வைத்துள்ளது.

Tags

Next Story
பொங்கல் பண்டிகை முடிவில் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.30..!