குமரியில் சுதந்திரதின அமுத திருவிழா மாரத்தான் போட்டி: மாணவ, மாணவிகள் பங்கேற்பு

குமரியில் சுதந்திரதின அமுத திருவிழா மாரத்தான் போட்டி: மாணவ, மாணவிகள் பங்கேற்பு
X

குமரியில் நடைபெற்ற சுதந்திரதின அமுத திருவிழா மாரத்தான் போட்டியில் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

குமரியில் நடைபெற்ற சுதந்திரதின அமுத திருவிழா மாரத்தான் போட்டியில் பல ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தின அமுத திருவிழாவையொட்டி இன்று முதல் ஒரு வாரத்திற்கு பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறுகின்றன.

அதன் முதல் நிகழ்ச்சியாக இன்று நாகர்கோவிலில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இருந்து தொடங்கிய இப்போட்டியை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஐந்து கிலோமீட்டர் தூரம் ஓடி முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழுடன் பரிசுகளும் வழங்கப்பட்டன. அதன்படி கல்லூரி மாணவ, மாணவிகளான ஆனந்தராஜ், ரம்யா ஆகியோர் முதலிடத்தையும் அஜித் குமார், கரிஷ்மா ஆகியோர் இரண்டாம் இடத்தையும், அனிஸ்லின், நிக்சன் ஆகியோர் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். தொடர்ந்து நாளை காலையில் குளச்சல் கடற்கரையில் தேச தலைவர்களின் மணல் சிற்பம் வரையும் போட்டியும் நடைபெற உள்ளது.

Tags

Next Story