/* */

போக்குவரத்து விதி மீறல்: குமரியில் ஐந்து நாளில் 10.417 வழக்கு பதிவு

போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டதாக குமரியில் ஐந்து நாளில் 10417 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

போக்குவரத்து விதி மீறல்: குமரியில் ஐந்து நாளில் 10.417 வழக்கு பதிவு
X

கன்னியாகுமரியில் போலீசார் வாகன தணிக்கை செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமலும், உரிய ஆவணங்கள் இன்றியும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிவேகத்துடன் வாகனங்களை இயக்குவதால் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.

மேலும் விதிமுறைகளை மீறி செயல்படும் வாகன ஓட்டிகளால் சரியான முறையில் வாகனங்களை இயக்கி வரும் வாகன ஓட்டிகளுக்கும், சாலையில் நடந்து செல்லும் பொது மக்களுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் விபத்துகள் ஏற்படுவதை தடுக்கவும் போக்குவரத்து விதி மீறல்களை தடுக்கவும் மாவட்டம் முழுவதும் வாகன சோதனையை தீவிரப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் உத்தரவிட்டார்.

அதன்படி கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் நடைபெற்ற வாகன சோதனையில் தலைக்கவசம் இல்லாதது. உரிய ஆவணங்கள் இல்லாதது, அதிவேகம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக ஒரேநாளில் 2135 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் கடந்த ஐந்து நாட்களில் விதி மீறல்களில் ஈடுபட்ட 10,417 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On: 26 April 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  2. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  5. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  6. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...
  7. வீடியோ
    🔴LIVE : Annamalai-யை படம் பார்க்க அழைத்தேன் | Ameer பகீர் தகவல் |...
  8. லைஃப்ஸ்டைல்
    முதுமையின் மூன்றாம் கால்..! அவளுக்கு அவனும்; அவனுக்கு அவளும்..!
  9. குமாரபாளையம்
    நகராட்சி துப்புரவு பணியாளர் தற்கொலை!
  10. ஈரோடு
    ஈரோட்டில் சுசி ஈமு நிறுவன அசையா சொத்துகள் ஏலம் ரத்து!