இலங்கை கப்பல் மோதி மீனவர் பலி: ரூ.25 லட்சம் வழங்க மீனவ அமைப்பு கோரிக்கை

இலங்கை கப்பல் மோதி மீனவர் பலி: ரூ.25 லட்சம் வழங்க மீனவ அமைப்பு கோரிக்கை
X
இலங்கை கடற்படை கப்பல் மோதி பலியான மீனவர் குடும்பத்திற்கு, ரூ. 25 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மீனவ அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 11-ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைபேட்டையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இரண்டு படகுகளில் இருந்த 22 மீனவர்களை, இலங்கை ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்தது. மேலும் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற படகை, இலங்கை கடற்படை கப்பல் மோதி மூழ்கடித்தது. இச்சம்பவத்தில் படகில் இருந்த மீனவர் ராஜ்கிரன் பலியானார்.

இந்நிலையில், இந்த இரு சம்பவங்களை கண்டித்து கன்னியாகுமரியில், தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, இலங்கை கப்பற்படை அராஜகத்தில் படகு கவிழ்ந்து உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் மத்திய மாநில அரசுகள் நஷ்டஈடாக வழங்க வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!