பாரம்பரிய கலைகள், ஓலைச்சுவடிகளுக்கு முக்கியத்துவம் - அமைச்சர் மனோ தங்கராஜ்.

பாரம்பரிய கலைகள், ஓலைச்சுவடிகளுக்கு முக்கியத்துவம் - அமைச்சர் மனோ தங்கராஜ்.
X

 அமைச்சர் மனோ தங்கராஜ்.

தமிழகத்தில் பாரம்பரிய கலைகள், ஓலைச்சுவடிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது தகவல் தொழில்நுட்பப் பிரிவில் இணையதள கல்வி உருவாக்கப்பட்டு அதில் தமிழகத்தில் இருக்கும் பல்வேறு கலை, இலக்கியங்கள், தமிழர்கள் பண்பாடு போன்றவை உலகறிய செய்யப்பட உள்ளன. தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களான தமிழகத்தின் வளம் என அழைக்கப்படும் ஓலைச்சுவடிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை ஆவணப்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர முயற்சிகளை எடுக்க தேவையான பணிகள் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தின் பாரம்பரிய களைகளான சிலம்பம், வர்மம் உள்ளிட்டவை மிகப்பெரிய தொன்மை வாய்ந்த கலைகள், காலப்போக்கில் அழிந்து வரும் கலைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அவற்றை உலகறிய செய்வதுதான் நோக்கம் என தெரிவித்தார்.

Tags

Next Story
ai in future agriculture