லாரியை நிறுத்தி கதவை திறந்த ஓட்டுநர் மின்சாரம் தாக்கி பலி

லாரியை நிறுத்தி கதவை திறந்த ஓட்டுநர் மின்சாரம் தாக்கி பலி
X
குமரியில். லாரியை நிறுத்திவிட்டு கதவை திறந்த ஓட்டுநர், மின்சாரம் தாக்கி பலியானார்.

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி மேலவிலாங்கோடு பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் ( 46 ), தனியார் பார்சல் சர்விஸ் நிறுவனத்தில் லாரி ஒட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், நாகர்கோவில் ஸ்காட் கிருஸ்தவ மேல்நிலை பள்ளி சாலை ஓரம் உள்ள கடையில், பார்சல் இறகுவதற்காக கண்டயினர் லாரியை நிறுத்திவிட்டு கதவை திறந்தார். அப்போது அருகில் இருந்த மின்மாற்றியில் கதவு உரசியதில், அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், லாரி ஓட்டுநர் துடிதுடித்து மயங்கி விழுந்தார்.

பொதுமக்கள், மின்சாரவாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்த நிலையில், மின்சாரம் துண்டிக்கப்பட்ட பின் பொதுமக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த வடசேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!