குமரி - வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்திய மருத்துவ பணியாளர்கள்

குமரி - வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்திய மருத்துவ பணியாளர்கள்
X
குமரியில் மெகா தடுப்பூசி முகாமின் ஒருபகுதியாக, வீடுவீடாகச் சென்று மருத்துவப் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தினர்.

கொரோனா இல்லாத மாவட்டமாக கன்னியாகுமரி மாவட்டத்தை உருவாக்க, பல்வேறு தடுப்பு பணிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மாவட்டம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் வாரம் தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள், பல்வேறு அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேர தடுப்பூசி போடுதல், வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இன்று நாகர்கோவில் மாநகராட்சி உட்பட பல்வேறு பகுதிகளில் முகாம்களில் அமைத்து, இதுவரை தடுப்பூசி போடாதவர்களுக்கு நேரடியாக, அவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்றன. பொதுமக்கள் அனைவரும் தங்களின் சமூக பொறுப்புணர்வை உணர்ந்து தவறாது தடுப்பு ஊசியை செலுத்தி கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!