கன்னியாகுமரி: மேம்பாலத்தில் விரிசலால் பொதுமக்கள் திக் திக்
பார்வதிபுரம் மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே, பார்வதிபுரம் பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு சுமார் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டப்பட்டது. அப்போது மத்திய இணை அமைச்சராக இருந்த பாஜகவின் மூத்த தலைவர் பொன். இராதாகிருஷ்ணன் முயற்சியால் கட்டப்பட்ட இந்த பாலம் போக்குவரத்து நெருக்கடியை முற்றிலுமாக குறைத்து.
நாகர்கோவில் - திருவனந்தபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த பாலத்தில், தற்போது விரிசல் ஏற்பட்டு ஸ்லாப் விழுந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக, பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லை.
சுமார் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டுவரப் பட்ட மேம்பாலம், இரண்டு ஆண்டுகளிலே விரிசல் கண்டிருப்பது, பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. முற்றிலும் இரும்பு பாலம் என்பதால், விரிசலுக்கான காரணத்தை உடனடியாக வல்லுநர் குழு கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu