82, 072 பேருக்கு கொரோனா தடுப்பூசி- சுகாதாரத்துறை

82, 072 பேருக்கு கொரோனா தடுப்பூசி- சுகாதாரத்துறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 82 ஆயிரத்து 72 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என மாவட்ட சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்படுகின்றன.முதற்கட்டமாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட முன் களப்பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதன்பிறகு பல்வேறு நோய் பாதிப்புள்ள 45 வயது முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 138 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.குமரி மாவட்டத்தில் இதுவரை முதல் கட்ட தடுப்பூசி 72 ஆயிரத்து 90 பேருக்கும், இரண்டாவது கட்ட தடுப்பூசி 9 ஆயிரத்து 982 பேருக்கும் என மொத்தம் 82 ஆயிரத்து 72 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story