குமரி: 400 மீட்டர் தூரம் நடந்து சென்று ஆய்வு செய்த மத்திய குழுவினர்

குமரி: 400 மீட்டர் தூரம் நடந்து சென்று ஆய்வு செய்த மத்திய குழுவினர்
X

குமரியில் நடந்து சென்று மழை சேதங்களை பார்வையிட்ட மத்தியக்குழுவினர். 

குமரியில், சாலைகள் சேதம் ஆனதால் 400 மீட்டர் தூரம் நடந்து சென்று மத்திய குழுவினர், மழை பாதிப்புகளை ஆய்வு செய்தனர்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பெய்த அதி தீவிர கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் வரலாறு காணாத பாதிப்பை சந்தித்தது. மாவட்டம் முழுவதும் வெள்ளைக்காடாக மாறிய நிலையில் அதிகமான பாதிப்புகளை கன்னியாகுமரி மாவட்ட மக்கள் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், குமரியில் ஏற்பட்ட வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய மத்திய நிதித்துறை ஆலோசனைக்குழு உறுப்பினர் ஆர்.பி.கவுல், மத்திய நீர் வள ஆராய்ச்சி இயக்க தங்கமணி, மத்திய எரிசக்தித் துறை உதவி இயக்குனர் பவ்யா பாண்டே, மத்திய வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் ஆகியோர் கொண்ட மத்திய அரசின் சிறப்பு குழுவினர் நேற்று, கன்னியாகுமரி மாவட்டம் வந்தனர்.

தொடர்ந்து கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த வெள்ள சேத புகைப்படங்களை பார்வையிட்ட மத்திய அரசின் சிறப்பு குழுவினர், மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தனர். இதனிடையே சாலைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்ட வடக்கு தாமரை குளம் பகுதியில் அமைந்துள்ள பிள்ளை பெத்த அணை பகுதிக்கு செல்ல முயன்ற மத்திய குழுவினர், வாகனம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 400 மீட்டர் தூரம் நடந்து சென்ற மத்திய குழுவினர் அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். குழுவினருடன் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
latest ai trends in agriculture