தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து மின்னணு திரை மூலம் விழிப்புணர்வு

தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து மின்னணு திரை மூலம் விழிப்புணர்வு
X

குமரியில் தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து மின்னணு திரையில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.

குமரியில் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் நிலையில் தடுப்பூசியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தமிழக அரசின் உத்தரவுப்படி மாநிலம் முழுவதும் வரும் 12 ஆம் தேதி மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது, கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் வசதிக்காக 600 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

அதன் படி மாவட்டம் முழுவதும் வாக்குச்சாவடி மையங்கள், அங்கன்வாடிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்றவற்றின் மூலம் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

கொரோனா மூன்றாம் அலையை தடுக்கும் பேராயுதமாக அரசால் அறிவிக்கப்பட்டு உள்ள தடுப்பூசியின் மகத்துவம் குறித்தும் தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்தும் குமரியில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் குமரி மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையங்கள், சந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் மின்னணு பெரிய திரைகள் மூலமாக தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Tags

Next Story
ai in future agriculture