மார்ஷல் நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மார்ஷல் நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
X

மார்ஷல் நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யபோது 

குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நாளான இன்று அதிகாரிகளும் அரசியல் கட்சியினரும் மார்ஷல் நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நாளான இன்று நாகர்கோவில் வேப்பமூட்டில் உள்ள மார்ஷல் நேசமணி சிலைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், மேயர் மகேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் பிரின்ஸ் எம்.எல்.ஏ., கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், வட்டாட்சியர் ராஜா சிங், ஒன்றிய செயலாளர் மதியழகன், தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவம், மாணவரணி அமைப்பாளர் அருண் காந்த், இளைஞர் அணி அமைப்பாளர் அகஸ்தீசன், நேசமணியின் பேரன் ரஞ்சித் அப்போலோஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன்புள்ள நேசமணி சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்தனர். அ.தி.மு.க. சார்பில் அவை தலைவர் சேவியர் மனோகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மாநில நிர்வாகி சந்துரு, ராணி துணை செயலாளர் சுகுமா ரன், இணைச் செயலாளர் சாந்தினி பகவதியப்பன், இளைஞர் அணி செயலாளர் ஜெயசீலன், வெங்கடேஷ் ஜெயகோபால், மாநகராட்சி கவுன்சிலர்கள் ஸ்ரீலிஜா, அக்சயாகண்ணன், பகுதி செயலாளர் முருகேஸ்வரன், பொதுக்குழு உறுப்பினர் மகாராஜா பிள்ளை, வக்கீல் சுந்தரம் மற்றும் ரபீக் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

காங்கிரஸ் சார்பில் விஜய்வசந்த் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட தலைவர் நவீன் குமார், முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி மண்டல தலைவர் செல்வகுமார், இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் சகாய பிரவீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பா.ம.க. சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!