நாங்கள் தானே ஒட்டு போட்டு ஜெயிக்க வச்சோம்: குமரியில் பெண்கள் ஆவேசம்

நாங்கள் தானே ஒட்டு போட்டு ஜெயிக்க வச்சோம்: குமரியில் பெண்கள் ஆவேசம்
X

குமரியில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரடியாக மனு அளிக்க முயன்ற பெண்கள்.

நாங்கள் தானே ஒட்டு போட்டு ஜெயிக்க வச்சோம் என குமரியில் முதல்வர் பாதுகாவலரிடம் பெண்கள் ஆவேசமாக பேசும் வீடியோ வைரல்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த பகுதிகளில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று நாகர்கோவில் வந்தார்.

நாகர்கோவிலில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வரும் வழியில் ஆட்சியர் அலுவலகம் முதல் பயணியர் விடுதி வரை சாலையோரம் 3 மணி நேரமாக மனுக்களுடன் கைக்குழந்தையோடு ஏராளமான பெண்கள் காத்திருந்தனர். முதல்வரின் பார்வைக்காக பிளீஸ் ஹெல்ப் மீ என்ற வாசகம் அடங்கிய பதாகைகளையும் ஏந்திய படி நின்றனர்.

இதனிடையே பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த இடத்திற்கு வந்த முதல்வரை காரிலேயே அமர வைத்த பாதுகாவலர்கள் அங்கிருந்த ஒரு சிலரிடம் மட்டும் மனுக்களை பெற்று கொண்டு மீதம் உள்ள பெண்களிடம் மனுக்களை வாங்காமல் செல்ல முயன்றனர்.

மேலும் முதல்வரிடம் நேரடியாக மனு அளிக்க முயன்ற பெண்களையும் பாதுகாவலர்கள் தடுத்தனர். இதனால் உச்சி வெயிலில் பல மணி நேரம் கால் கடுக்க காத்திருந்த பெண்கள் பாதுகாவலர்களை பார்த்து எங்களை ஏன் மனு கொடுக்க விடாமல் தடுக்கிறீர்கள் என ஆவேசமாக கேட்டனர்.

மேலும் நாங்கள் தானே ஒட்டு போட்டு ஜெயிக்க வச்சோம், எங்களிடம் ஏன் மனு வாங்காமல் செல்கிறீர்கள் என ஆவேசமாக கேட்டனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil