வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் உள்ள 2,243 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வைக்கபட்டு உள்ளது. அந்த கல்லூரியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் இரவு பகலாக சுழற்சி முறைகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கூடுதல் பாதுகாப்புக்காக வெப் கேமரா வசதிகளும் செய்யபட்டு உள்ளது.

மேலும் உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு அதிலும் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டு உள்ள அரசு பொறியியல் கல்லூரி முழுமையாக போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு உள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!