பேருந்து நிலையத்தில் அத்துமீறி நுழையும் வாகனங்கள்: அபராதம் விதித்து போலீசார் அதிரடி

பேருந்து நிலையத்தில் அத்துமீறி நுழையும் வாகனங்கள்: அபராதம் விதித்து போலீசார் அதிரடி
X

அண்ணா பேருந்து நிலையத்தினுள் அத்து மீறி வரும் இருசக்கர வாகன ஒட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். 

குமரியில் பேருந்து நிலையத்தில் அத்து மீறி நுழையும் இருசக்கர வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்து அதிரடி காட்டினர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரிய பேருந்து நிலையமாகவும் முக்கிய பேருந்து நிலையமாகவும் உள்ளது நாகர்கோவிலில் உள்ள அண்ணா பேருந்து நிலையம்.

இந்த பேருந்து நிலையம் நெருக்கடி கொண்ட பேருந்து நிலையமாக இருக்கும் நிலையில் பேருந்து நிலையத்தினுள் அரசு பேருந்துகளை தவிர மற்ற வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் அண்ணா பேருந்து நிலையம் வழியாக மீனாட்சிபுரம் செல்ல சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் இருக்கும் நிலையில் பேருந்து நிலையத்தின் உள்புரமாக சென்றால் 100 மீட்டர் தூரம் கூட இருக்காது என்பதால் பல வாகன ஓட்டிகள் விதிமுறைகளை மீறி பேருந்து நிலையத்தில் உள்ளே அத்து மீறி நுழைகின்றனர். இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதோடு பல பொதுமக்கள் காயம் அடைந்து வந்தனர்.

இந்நிலையில் அண்ணா பேருந்து நிலையத்தினுள் முகாமிட்ட போலீசார் அத்து மீறி பேருந்து நிலையத்தினுள் வரும் இருசக்கர வாகன ஒட்டிகளுக்கு அபராதம் விதித்தனர். மேலும் தொடர்ந்து அபராத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என போலீசார் தரப்பில் தெரிவித்து உள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!