லஞ்ச புகாரில் சிக்கிய பெண் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்: ஐஜி அதிரடி

லஞ்ச புகாரில் சிக்கிய பெண் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்: ஐஜி அதிரடி
X
லஞ்ச புகாரில் சிக்கிய மகளிர் இன்ஸ்பெக்டர் கண்மணியை இடம் மாற்றம் செய்து தென் மண்டல ஐஜி உத்தரவிட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றியவர் கண்மணி.

இவரது கணவர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண்மணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில் காவல் ஆய்வாளர் கண்மணி அளவிற்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்தது தெரிய வந்தது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனி ஆய்வாளர், புலனாய்வு பிரிவு என காவல் துறையின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைக்கு பிறகு கண்மணி மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. குறிப்பாக அரசு அதிகாரிகள் பணி விதிகளை மீறி கண்மணி ஒரே இடத்தில் பல வருடங்களாக பணியாற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் தற்போது நாகர்கோவில் மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வரும் கண்மணியை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்து தென் மண்டல ஐஜி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

Tags

Next Story
ai automation in agriculture