எளிய முறையில் டோக்கன் - அனைவருக்கும் தடுப்பூசி; மக்களை கவரும் மாநகராட்சி

எளிய முறையில் டோக்கன் - அனைவருக்கும் தடுப்பூசி; மக்களை கவரும் மாநகராட்சி
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி சார்பாக நடந்த சிறப்பு தடுப்பூசி முகாமில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

எளிய முறையில் டோக்கன் வழங்கி அனைவருக்கும் தடுப்பூசி இலக்கால் மக்களை கவருகிறது நாகர்கோவில் மாநகராட்சி.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி சார்பாக சிறப்பு தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

மேலும் கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு அவர்களுக்கு தனி முகாம்கள் மூலம் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. அதன்படி இன்றைய தினம் நாகர்கோவில் மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.

இதனிடையே ராமன்புதூர், வடசேரி, கிருஷ்ணன்கோவில் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது சிறப்பான ஏற்பாடுகளுக்காக தனது பாராட்டையும் மாநகராட்சி ஆணையருக்கு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

எளிய முறையில் டோக்கன் மூலம் அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி செல்லும் நாகர்கோவில் மாநகராட்சியின் செயல் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!