சிசிடிவி மூலம் சுய பாதுகாப்பை உறுதி செய்த பொதுமக்கள்.

சிசிடிவி மூலம் சுய பாதுகாப்பை உறுதி செய்த பொதுமக்கள்.
X

நாகர்கோயில் வாகையடி தெருவில் உள்ள வீடு ஒன்றில் கண்காணிப்பு கேமிரா பொறுத்தப்பட்டுள்ளது.

நாகர்கோவிலில் சிசிடிவி கேமரா அமைத்து அதன் மூலம் தங்கள் சுய பாதுகாப்பை பொதுமக்கள் உறுதி செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சமூக விரோதிகள், சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் கஞ்சா வியாபாரிகள், கள்ள மது விற்பணை செய்பவர்கள் என சமூகத்தை அச்சுறுத்தி வரும் குற்றவாளிகள் அதிகரித்து வரும் நிலையில் இவர்களை தடுக்க காவல்துறையினர் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாகர்கோவில் கோட்டார் ரயில் நிலையத்திற்கு அருகே அமைந்துள்ள வாகையடி தெரு பகுதியில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் நடமாட்டம் அதிகரித்து வருவதாகவும் கஞ்சா விற்பனை மூலம் அதிக பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் இதனால் தங்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு கோரிக்கை வைத்தார்கள். இதனை தொடர்ந்து அப்பகுதிகளை காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தார்கள். அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சிலரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று கூடி பணம் திரட்டி அப்பகுதி முழுவதும் கண்காணிப்பு காமிராக்களை பொருத்தினார்கள். இதனை நாகர்கோயில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நவீன் தொடங்கி வைத்ததோடு அப்பகுதி மக்களையும் வெகுவாக பாரட்டினார். மேலும் இதை போல் நாகர்கோவிலில் அனைத்து பகுதி மக்களும் காவல்துறைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!