உரக்கிடங்கு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி மேயர்

உரக்கிடங்கு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி மேயர்
X

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சி பகுதியின் மத்தியில் அமைந்துள்ளது வலம்புரிவிளை உரக் கிடங்கை மேயர் மகேஷ் ஆய்வு செய்தார்

நாகர்கோவிலில் உள்ள உரக்கிடங்கு, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி மேயர்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சி பகுதியின் மத்தியில் அமைந்துள்ளது வலம்புரிவிளை உரக் கிடங்கை மேயர் மகேஷ் ஆய்வு செய்தார்.

பள்ளி கல்லூரிகள் காணப்படும் இந்த பகுதியில் அமைந்துள்ள உர கிடங்கால் நோய் தொற்று பரவுவதாகவும், பல நேரங்களில் இந்த உர கிடங்கில் ஏற்படும் தீ விபத்தால் கரும் புகை உருவாக்கி பலருக்கும் சுவாசப்பிரச்னை ஏற்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

இதனிடையே உரக்கிடங்கு மற்றும் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் குமரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான மகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன் மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் விஜயசந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்.அப்போது உரக்கிடங்கை மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது, உர கிடங்கில் தற்போது இருக்கும் குப்பைகளை உரமாக மாற்ற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

Tags

Next Story