குமரியில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை - பாதுகாப்பை உறுதி செய்த மாநகராட்சி

குமரியில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை - பாதுகாப்பை உறுதி செய்த மாநகராட்சி
X
குமரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும் நிலையில் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் காலவரையின்றி அடைக்கப்பட்டு உள்ள நிலையில் நாளை முதல் பள்ளி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

அதன் படி நாளை முதல் பள்ளி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதுகாப்பு விதிமுறைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

இதே போன்று நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் வேகமாக செய்து வருகிறது.அதன் படி மாநகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ள பள்ளிகளில் வளாகம், மாணவர் சேர்க்கை நடைபெறும் கட்டிடங்கள் போன்றன கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கைகளை கழுவவும் கிருமி நாசினி திரவம் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்வதோடு சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் தேவையான முன்னேற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு உள்ளது.மாநகராட்சியின் இந்த மக்கள் நல பணியால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் போது பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!