கர்ப்பிணி பெண்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம், கலெக்டர் நேரில் ஆய்வு

கர்ப்பிணி பெண்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம், கலெக்டர் நேரில் ஆய்வு
X

நாகர்கோவில் மாநகராட்சியில் நடந்த கர்ப்பிணி பெண்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் ஆய்வு செய்தார்.

நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கென நடந்த சிறப்பு தடுப்பூசி முகாமினை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் நடைபெற்ற தடுப்புசி முகாம்களில் கர்ப்பிணி பெண்கள் வரிசையில் நின்று பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

தற்போதைய நோய்த்தொற்று தாக்கத்தை கருத்தில் கொண்டு கர்ப்பிணி பெண்கள் 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கும் தனி முகாம் நடத்திட வேண்டும் என நமது இன்ஸ்டா நியூஸ் செய்தி தளம் செய்தி வெளியிட்டதோடு மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வடசேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்காக பிரத்யேகமாக கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற முகாமினை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் மற்றும் மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் கிங்சால் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்