மனவளர்ச்சி குன்றியோர், மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் - மாநகராட்சி ஏற்பாடு

மனவளர்ச்சி குன்றியோர், மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் - மாநகராட்சி ஏற்பாடு
X
நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் மனவளர்ச்சி குன்றியோர், மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்.

நாகர்கோவில் மாநகராட்சி சார்பாக கொரோன நோய் தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி போடும் முகாம்கள் மாநகர பகுதி முழுவதும் நடைபெற்று வருகின்றன.

மேலும் முகாமிற்கு வந்து தடுப்பூசி செலுத்தி கொள்ள முடியாத முதியவர்கள், ஆதரவற்றோர், மனவளர்ச்சி குன்றியோர், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கு அவர்களின் இருப்பிடம் சென்று தடுப்பூசி செலுத்தும் பணியை நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

அதன் படி இன்று மனவளர்ச்சி குன்றியோர், காது கேளாதோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நாகர்கோவில் மாநகர பகுதிகளில் நடைபெற்றது. இதனை மாநகராட்சி ஆணையர் தொடங்கி வைத்ததோடு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!