வெளிநாடு செல்பவர்களுக்காக சிறப்பு தடுப்பூசி முகாம்: மாநகராட்சி ஏற்பாடு

வெளிநாடு செல்பவர்களுக்காக சிறப்பு தடுப்பூசி முகாம்:  மாநகராட்சி ஏற்பாடு
X
தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்த நாகர்கோவில் மாநகராட்சிக்கு வெளிநாடு செல்லும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்

நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் வெளிநாடு செல்பவர்களுக்காக கோவிஷீல்டு தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது

கொரோனா நோய் தொற்றை தடுக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, தடுப்பூசி இருப்பு குறைவு மற்றும் பொதுமக்களின் கூட்டம் காரணமாக வெளிநாடு செல்பவர்களுக்கு தடுப்பூசி கிடைக்காமல் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனிடையே, வெளிநாடு செல்பவர்களுக்காக தனி முகாம் அமைத்து தர வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.

இதனை தொடர்ந்து, நாகர்கோவில் மாநகராட்சி சார்பில், வெளிநாடு செல்பவர்களுக்காக கோவிஷீல்டு தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. இதில், பாஸ்போர்ட், விசா வைத்து இருக்கும் சுமார் 200 -க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி எடுத்து கொண்டனர், தங்களுக்கு எளிய முறையில் தடுப்பூசி கிடைக்க வழி ஏற்படுத்தி கொடுத்த மாநகராட்சி நிர்வாகத்திற்கு அவர்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்