செல்லப்பிராணிகளுக்கு ஆர்வத்துடன் ரேபிஸ் தடுப்பூசி போட்ட பொதுமக்கள்
ஸ்ரீ அவிட்டம் திருநாள் மகாராஜா காப்பகத்தில் நடைபெற்ற முகாமில், செல்லப்பிராணிகளை அழைத்து வந்து பொதுமக்கள் வெறிநோய் தடுப்பூசி போட்டு சென்றனர்.
உலக அளவில் விலங்குகள் மற்றும் பிராணிகளால் மனிதர்களுக்கு பரவும் ரேபீஸ் என்ற கொடிய நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை; இதற்கு தீர்வாக தடுப்பூசிகள் மட்டுமே இதுவரை பயன்படுத்தபட்டு வருகின்றன. ரேபீஸ் என்ற கொடிய நோயில் இருந்து விலங்குகளையும் மனிதர்களையும் பாதுகாத்துக்கொள்ள விலங்குகளுக்கு வெறிநோய் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்நோய் தாக்கிய மனிதர்களோ, விலங்குகளோ 100% இறப்பது உறுதி என்ற நிலையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.
இதனிடையே உலக வெறிநோய் தடுப்பூசி தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் ஜீவகாருண்ய விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் செல்லப்பிராணிகளுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மாநகராட்சிக்கு சோமதமான ஸ்ரீ அவிட்டம் திருநாள் மகாராஜா காப்பகத்தில் நடைபெற்ற இந்த முகாமில்.ஏராளமானோர் தாங்கள் வீடுகளில் வளர்த்து வரும் செல்லப்பிராணிகளை அழைத்து வந்து வெறிநோய் தடுப்பூசி போட்டு சென்றனர். இதே போன்று கவனிப்பாரற்ற தெரு நாய்களுக்கும் வெறிநோய் தடுப்பூசி போடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu