பள்ளி அருகே செல்போன் கோபுரம் - ஊர் மக்கள் திரண்டு வந்து எதிர்ப்பு

பள்ளி அருகே செல்போன் கோபுரம் - ஊர் மக்கள் திரண்டு வந்து எதிர்ப்பு
X

குமரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்த, காற்றாடிதட்டு கிராம மக்கள். 

கன்னியாகுமரியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஊரே திரண்டு வந்து கோரிக்கை மனு அளித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே காற்றாடி தட்டு என்ற இடத்தில், சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர், இந்த பகுதியில் உள்ள பள்ளியில் சுமார் 1200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர்.

இப்பள்ளி நுழைவுவாயில் அருகே, செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது, கோபுரம் அமைக்கும் இடத்தில் இருந்து 2 அடிக்கும் குறைவான தூரத்தில், பள்ளி விளையாட்டு மைதானமும், பள்ளிக்கும் செல்போன் கோபுரத்துக்கும் இடையே 20 மீட்டர் மட்டுமே தொலைவு உள்ளது.

இதனால் செல்போன் கோபுரத்தில் உள்ள மின்காந்த அலைகள், ஊர் பொது மக்களுக்கும், மாணவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அதை அமைக்க கூடாது எனக்கூறி, அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் செல்போன் கோபுரம் அமைக்கும் கட்டுமான பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தி, நாகர்கோவிலில் உள்ள, குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நேற்று மனு அளித்த ஊர் பொதுமக்கள், எந்த சூழ்நிலையிலும் செல்போன் கோபுரம் அமைக்க விட மாட்டோம் என்று உறுதிப்பட கூறினர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil