அரசு உத்தரவை மீறி டாஸ்மாக் பார்: ஆப்பு வைத்த காவல்துறை

அரசு உத்தரவை மீறி டாஸ்மாக் பார்: ஆப்பு வைத்த காவல்துறை
X

தடையை மீறி செயல்பட்ட பாரை சீல் வைத்த காவல்துறை]

குமரியில் அரசு உத்தரவை மீறி செயல்பட்ட டாஸ்மாக் பாரை சீல் வைத்து உரிமையாளரை கைது செய்த காவல்துறையினர்

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக டாஸ்மாக் பார்களை திறக்க தமிழக அரசு தடை உத்தரவு பிறப்பித்து உள்ளது. அதன்படி டாஸ்மார்க் பார்களை திறக்க தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் நாகர்கோவில் பகுதிகளில் பல டாஸ்மார்க் பார்கள் ரகசியமாக இயங்குகிறது என போலீசாருக்கு தகவல் வந்தது.

அதன் அடிப்படையில் நாகர்கோவில் பீச்ரோடு சந்திப்பில் உள்ள டாஸ்மாக்கை ஒட்டி உள்ள பாரில் எஸ்.பி. தனிபிரிவு காவல் உதவி ஆய்வாளர் ரெகுபாலஜி மற்றும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு குடிமகன்கள் அமர்ந்து குடித்து கொண்டு இருந்தனர், போலீசாரை பார்த்ததும் ஓட முயன்றனர், இதனை தொடர்ந்து குடிமகன்களை வெளியே அனுப்பிவைத்த போலீசார் பார் உரிமையாளரை கைது செய்து பாரை பூட்டி சீல் வைத்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்