5 கிலோ இயற்கை உரம் 10 ரூபாய் - நாகர்கோவில் மாநகராட்சி அதிரடி

5 கிலோ இயற்கை உரம் 10 ரூபாய் - நாகர்கோவில் மாநகராட்சி அதிரடி
X

5 கிலோ உரம் ரூபாய் 10 என்ற மலிவு விலையில், நாகர்கோவில் மாநகராட்சியால் விற்கப்படுகிறது.

நாகர்கோவில் மாநகராட்சி, 5 கிலோ இயற்கை உரம் 10 ரூபாய் என உற்பத்தி விலைக்கு, உரம் விற்பனை செய்து வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சி, நுண் உரம் செயலாக்க மையங்கள் மூலமாக வீடுகளுக்கு தேவையான இயற்கை உரம் விற்பனை செய்து வருகிறது. அவ்வகையில், 5 கிலோ உரம் ரூபாய், 10 என்ற மலிவு விலையில் உரமானது விற்பனை நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு தேவையான இயற்கை உரத்தை அருகில் உள்ள நுண் உர செயலாக்க மையங்களில் இருந்து வாங்கிக் கொள்ளலாம்.

மேலும், விளைநிலங்களுக்கு தேவையான உரம், 1 கிலோ, 1 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள், உரம் தேவைப்பட்டால் 9442277273 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு, பெற்று கொள்ளலாம் என, மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!