காணாமல் போன செல்போன்கள், கண்டுபிடித்து ஒப்படைத்த காவல்துறை

குமரியில் காணாமல் போன நூறு செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் போலீஸ் எஸ்.பி பத்ரி நாராயணன் வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் செல்போன் காணாமல் போனதாக பல்வேறு புகார் மனுக்கள் பெறப்பட்டது.
அந்த புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின்படி அவருடைய நேரடி மேற்பார்வையில் இயங்கும் சைபர் கிரைம் பிரிவு போலீசார் காணாமல் போன செல்போன்களை மீட்கும் பணியில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
அதன் தொடர் நடவடிக்கையாக தற்போது சுமார் 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 100 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது, மேற்படி கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நபர்களிடம் இன்று ஒப்படைத்தார்.
இந்த செல்போன்களை கண்டுபிடிக்க காரணமாக சைபர் கிரைம் பிரிவு போலீசாரை காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார், மேலும் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட நிலுவையில் இருக்கும் புகார் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த வருடத்தில் மட்டும் இதுவரை 360 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu