குமரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்
கன்னியாகுமரி மாவட்டம் வருகை தந்த தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டதோடு பல்வேறு திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 1.5 கோடி மதிப்பீட்டில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவியை தொடங்கி வைத்தார். நிமிடத்திற்கு 550 லிட்டர் அக்சிஜன் உற்பத்தி செய்யும் இந்த கருவி ஒரு நிமிடத்திற்கு 100 நோயாளிகளுக்கு 5 லிட்டர் ஆக்சிஜன் அளிக்க இயலும் வகையில் அமைக்கபட்டுள்ளது
மேலும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 12 முதல் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமினை ஆய்வு செய்தார். தொடர்ந்து நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் மருத்துவ துறையை சேர்ந்தவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.அப்போது மருத்துவ துறை சார்ந்த பல்வேறு குறைகளை கேட்டறிந்த அவர் அதற்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றதோடு புற்றுநோய் சிகிச்சை மையம் உள்ளிட்ட திட்டங்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்படும் என அறிவித்தார்.
ஆய்வின் போது தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மற்றும் உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu