நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் மேயர் ஆய்வு

நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் மேயர் ஆய்வு
X

நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார்.

நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரின் முக்கிய பேருந்து நிலையத்தில் ஒன்றான அண்ணா பேருந்து நிலையத்தில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேருந்து நிலையத்தில் மாநகராட்சி சார்பில் ஒதுக்கிய கடைகளுக்கு முன்புறமாக ஏறத்தாழ 80 சதவிகிதம் நடைபாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். மேலும் சுகாதார சீர்கேடான நிலையில் காணப்படும் கட்டண கழிப்பறை சுத்தம் செய்யாவிட்டால் கட்டண கழிவறை ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

சேதமடைந்த இருக்கைகள் அனைத்தும் உடனடியாக அப்புறப்படுத்தப்படும், அண்ணா பேருந்து நிலையம், கிறிஸ்டோபர் பேருந்து நிலையம் மற்றும் ஆம்னி பேருந்து நிலையம் ஆகிய பேருந்து நிலையங்களை மேம்படுத்த மாண்புமிகு முதல்வர் அவர்கள் 9 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதன்படி மேம்பாட்டு பணிகள் விரைவில் நடைபெற உள்ளது. சுகாதார சீர்கேடான முறையில் தின்பண்டங்கள் மற்றும் உணவுபொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் தெரிவித்தார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!