தாய் தந்தையை பார்த்து கதறி அழும் குழந்தைகள் தக்கலை விபத்து சிசிடிவி காட்சி வெளியானது

தாய் தந்தையை பார்த்து கதறி அழும் குழந்தைகள்  தக்கலை விபத்து சிசிடிவி காட்சி வெளியானது
X

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இது குறித்த சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகின.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பகுதியை சேர்ந்தவர் சகாயதாஸ் (50). இவர் நேற்று அதிகாலை தனது இரண்டு மகள் மற்றும் மகனுடன் அவரது உறவினர் உட்பட 8-நபர்களுடன் நாகர்கோவிலில் உள்ள தேவாலயத்தில் நடைபெறும் கூட்டு பிரார்த்தனையில் பங்கேற்பதற்காக மார்த்தாண்டத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் தனது காரில் சென்றுகொண்டு இருந்தார்.கார் தக்கலை அருகே சுவாமியார்மடம் பகுதியில் வரும் போது எதிரே அதிவேகமாக கோவில்பட்டி பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் ஓட்டி வந்த காய்கறி லாரி இவர்கள் வாகனத்தின் மேல் மோதி வாகனமே உருக்குலைந்தது.இந்த விபத்தில் காரில் இருந்த 8-பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்ட நிலையில் அனைவரும் அதிர்ஷ்டவசமாக படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.

மேலும் அனைவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அதில் இருவருக்கு அதி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தை ஏற்படுத்திய லாரியை டிரைவர் ரவிச்சந்திரன் என்பவர் நிறுத்தாமல் கொண்டு சென்ற நிலையில் தக்கலை போலீசார் லாரியை மடக்கி பிடித்து லாரி டிரைவர் ரவிச்சந்திரனை கைது செய்தனர்.இதனிடையே தற்போது சம்பவ இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட பதபதைக்க வைக்கும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் கார் முற்றிலுமாக சேதமடைந்த நிலையில் அந்த காரில் இருந்து வீசப்பட்ட குழந்தைகள் தாய் தந்தையை பார்த்து கதறி அழும் காட்சிகள் கல் நெஞ்சையும் உருக செய்யும் வகையில் உள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!