குமரியில் தொடரும் தடுப்பூசி குளறுபடி - மக்கள் வேதனை.

குமரியில் தொடரும் தடுப்பூசி குளறுபடி - மக்கள் வேதனை.
X
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் தடுப்பூசி குளறுபடியால் மக்கள் வேதனை அடைந்தனர்.

கொரோனா பரவல் அதிகரிப்பை தொடர்ந்து தடுப்பூசி செலுத்தி கொள்வதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை தடுப்பூசி குறித்த முறையான தகவல்கள் மற்றும் இருப்பு அளவு குறித்த வெளிப்படையான அறிக்கை இல்லாததால் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுவதோடு பல நாட்களாக அழைக்களிக்கப்பட்டு வருவது வாடிக்கையாக அமைந்துள்ளது.

இந்நிலையில் இன்று நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் இந்து கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் காலை 6 மணி முதலே சுமார் 3000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

இதன் காரணமாக நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது, இதனிடையே நீண்ட நேரத்திற்கு பின்னர் 500 டோக்கன் மட்டுமே உள்ளதாக அறிவித்த மாநகராட்சி நிர்வாகம் அதில் 300 நபர்களுக்கு மட்டும் டோக்கன் கொடுத்து விட்டு டோக்கன் தீர்ந்ததாக அறிவித்தது. இதன் காரணமாக காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் விரக்தி அடைந்ததோடு ஏமாற்றம் அடைந்தனர், மேலும் தங்களை களைந்து போக கூறிய போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது, கன்னியாகுமரி மாவட்டத்தில் தடுப்பூசி போடுவதில் தொடர்ந்து குளறுபடி நீடித்து வரும் சம்பவம் பொதுமக்களை வேதனை அடையச் செய்துள்ளது. தடுப்பூசி இருப்பு குறித்த விவரத்தை நேற்று இரவில் தெரிவித்த மாநகராட்சி நிர்வாகம் காலையிலேயே வரும் நபர்களுக்கு டோக்கன் கொடுத்து இருந்தால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil