ஜீவானந்தம் 115 ஆவது பிறந்தநாள், அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை

ஜீவானந்தம் 115 ஆவது பிறந்தநாள், அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை
X

ஜீவானந்தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு நாகர்கோவிலில் மணி மண்டபத்தில் அமைந்து உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ஜீவானந்தம் பிறந்தநாளை முன்னிட்டு குமரியில் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் 1907 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதி பிறந்தவர் ஜீவானந்தம். இளமையிலேயே கம்யூனிஸ்ட் கொள்கைகளால் ஈர்க்கபட்டு தன்னை அந்த இயக்கத்தில் அர்பணித்து பொது வாழ்வில் ஈடுப்பட்டார்.

1932 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்க போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்கு சென்றார்.

40 ஆண்டுகள் பொது வாழ்வில் 10 ஆண்டுகள் சிறை தண்டனைகள் அனுபவித்தார், நாடு விடுதலை அடையும் வரை பல்வேறு தொழிலாளர்கள் ஆதரவாக போராட்டங்களில் ஈடுபட்டு வந்தவர்.

அவர் சென்னை வண்ணாரபேட்டை தொகுதியில் நின்று போட்டியிட்டு 1952 ல் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யபட்ட பொதுவுடமை சிற்பி என்று அழைக்கபட்ட அவருக்கு இன்று 115 பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது.

பொது உடைமை சிற்பி ஜீவானந்தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு நாகர்கோவிலில் மணி மண்டபத்தில் அமைந்து உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அதன் படி தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி ஆகியோர் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!