கன மழை நீடிக்க வாய்ப்பு: சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை

கன மழை நீடிக்க வாய்ப்பு: சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை
X

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாதப்பிறப்பைமுன்னிட்டு நடை திறக்கப்பட்டது

கேரளாவில் 19-ஆம் தேதி வரை கன மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கன மழை நீடிக்க வாய்ப்பு: சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை

சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவில் நடை ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பை முன்னிட்டு திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெறும். அதன்படி ஐப்பசி மாத பூஜையையொட்டி, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்தார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வழக்கமான பூஜைகளுடன் நெய்யபிஷேகம் உள்பட பூஜைகள் வருகிற 21-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறும். ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில், தினசரி 15 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. பலத்த மழை காரணமாக பம்பை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் பம்பை ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரளாவில் 19-ஆம் தேதி வரை கன மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து 19-ஆம் தேதி வரை சபரிமலையில் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கேரளா அரசு அறிவித்துள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்