/* */

குடும்பமே திட்டி தாக்கியதில் விரக்தி- கணவர் தற்கொலை

குடும்பமே திட்டி தாக்கியதில் விரக்தி- கணவர் தற்கொலை
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் மனைவி, மகன் மற்றும் மகள் திட்டி தாக்கியதால் விரக்தியடைந்த கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சுசீந்திரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கொத்தன்குளம் என்ற ஊரை சேர்ந்தவர் முரளி காந்த் (45). இவருக்கும் தோவாளை புதூரை சேர்ந்த சரிதா என்பவருக்கும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சரிதா அதிமுக நிர்வாகியாக உள்ளார். இவர்களுக்கு அபிஷேக் என்ற மகனும் அபிஷா என்ற மகளும் உள்ளனர்.திருமணத்திற்கு பின்பு முரளி காந்த் வெளிநாட்டில் வேலை பார்த்து விடுமுறையில் அவ்வப்போது சொந்த ஊர் வந்து செல்வார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் அவர் சொந்த ஊர் வந்தார்.

அதன் பின்னர் அடிக்கடி கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் அவரது மகன் மற்றும் மனைவி ஆகியோர் தாக்கியதில் அவருக்கு நெற்றியில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு கொத்தன்குளத்தில் உள்ள தனது சகோதரர் வீட்டில் தங்கியிருந்தார். அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் தாக்கியது நினைத்து மிகவும் மன வேதனை அடைந்த முரளி காந்த் நேற்று விஷம் குடித்தார்.இந்நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முரளிகாந்த் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 16 April 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?