போக்குவரத்து காவல் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா

போக்குவரத்து காவல் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா
X

புதிய போக்குவரத்து காவல் நிலையத்திற்கான பணிகளை போலீஸ் எஸ்பி பத்ரி நாராயணன் தொடங்கிவைத்தார்.

நாகர்கோவில் போக்குவரத்து காவல் நிலைய புதிய கட்டிடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அடிக்கல் நாட்டினார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் போக்குவரத்து காவல் ஒழுங்குபடுத்தும் பிரிவு கணேசபுரம் பகுதியில் பழைய கட்டிடத்தில் இயங்கி வந்தது.

போதுமான வசதிகள் இல்லாத நிலையில் தற்போது அந்த கட்டிடம் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது.

இதனை தொடர்ந்து கோட்டார் காவல் நிலையத்தின் அருகே போக்குவரத்து காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் அதற்கான பணிகள் தொடங்கின.

தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் கலந்து கொண்டு புதிய போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பிரிவு காவல் நிலயத்திற்கு அடிக்கல் நாட்டினார்.அவருடன் காவல் அதிகாரிகள், ஆளினார்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!