நாகர்கோவில் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு

நாகர்கோவில் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு
X

பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி அதிகாரிகள்.

நாகர்கோவிலில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழக அரசின் உத்தரவின்படி நோய்தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடந்த 1 ஆம் தேதி முதல் 9 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளி வகுப்புகள் துவங்கின.

இதனிடையே மாநகராட்சி ஆணையரின் உத்தரவின்படி, நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள நோய் தடுப்பு விதிமுறைகள் குறித்து மாநகர் நல அலுவலர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மேலும் கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் மற்றும் அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு நடைபெற்று வரும் சிறப்பு தடுப்பூசி முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் பாதுகாப்பை உறுதி செய்ய அறிவுறுத்தி உள்ள மாநகராட்சி அதிகாரிகள் சோதனை மற்றும் ஆய்வு தொடர்ந்து நடைபெறும் என அறிவித்துள்ளது.

பொதுமக்கள் சமூக நலனை கருத்தில் கொண்டு பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசங்கள் அணிவதையும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

Tags

Next Story