கடையில் பணியாற்றிய 3 பேருக்கு கொரோனா உறுதி

கடையில் பணியாற்றிய 3 பேருக்கு கொரோனா உறுதி
X

நாகர்கோவிலில் ரேடியோ கடையில் பணியாற்றிய 3 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2 ஆவது அலை பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் ஏராளமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் உள்ள ரேடியோ கடையில் பணியாற்றிய 3 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் உத்தரவின் பேரில் மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் கிங்சால் மேற்பார்வையில் சம்பந்தப்பட்ட கடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுகாதார பணியாளர்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதார ஆய்வாளர் மாதவன் பிள்ளை தலைமையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

Tags

Next Story
ai marketing future