நாகர்கோவிலில் தனி முகாம் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி

நாகர்கோவிலில் தனி முகாம் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி
X
 தனி முகாம் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
நாகர்கோவிலில் தனி முகாம் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாநகராட்சியின் இந்த செயல்பாடு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களில் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அவர்களுக்கு எந்த வித வசதிகளும் செய்து கொடுக்கப்பட வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை தொடர்ந்து மின்விசிறி வசதி, இருக்கை வசதி உள்ளிட்ட வசதிகள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது.

அதன்படி வடசேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

இதனை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த், மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் ஆகியோர் பார்வையிட்டு தேவைப்படும் வசதிகள் குறித்து கேட்டறிந்தனர். அப்போது தனி முகாம் மூலம் தடுப்பூசி செலுத்த உதவிய மாநகராட்சிக்கு கர்ப்பிணி பெண்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!