நாகர்கோவில் மாநகராட்சியில் 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

நாகர்கோவில் மாநகராட்சியில் 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
X

நாகர்கோவில் மாநகராட்சியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வமுடன் கலந்து கொண்ட பொதுமக்கள்.

நாகர்கோவில் மாநகராட்சியில் 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன் படி மாவட்டம் முழுவதும் இன்று 13210 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் மாநகர எல்கைக்குள் 5 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதற்காக நேற்று முதலே கொசு மருந்து அடித்தல், கிருமி நாசினி தெளித்தல் என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது.

இதனிடையே இன்று நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து எளிமையான முறையில் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

மாநகராட்சியின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை நாகர்கோவில் மாநகர மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று உள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!