/* */

பைப் கம்போஸ்டிங் முறையில் இயற்கை உரம் தயாரிக்கும் திட்டம் அறிமுகம்

நாகர்கோவில் மாநகராட்சி சார்பில், பைப் கம்போஸ்டிங் முறையில் இயற்கை உரம் தயாரிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

பைப் கம்போஸ்டிங் முறையில் இயற்கை உரம் தயாரிக்கும் திட்டம் அறிமுகம்
X

நாகர்கோவில் மாநகராட்சி, ஞானம் நகர் பகுதியில் வீடுகளில் மக்கும் குப்பைகளை கொண்டு இயற்கை உரம் தயாரிக்கும் வகையில் பைப் கம்போஸ்டிங் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் வீடுகளில் மக்கும் குப்பைகளை கொண்டு இயற்கை உரம் தயாரிக்கும் வகையில், பைப் கம்போஸ்டிங் முறை அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இது குறித்த செயல்முறை விளக்கத்தை மக்களுக்கு அளித்து, அதன் மூலம் அனைத்து பகுதிகளிலும் பைப் கம்போஸ்டிங் முறை அறிமுகப்படுத்த மாநகராட்சி திட்டம் வகுத்துள்ளது. அதன்படி இன்றைய தினம், மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் உத்தரவின்படி, ஞானம் நகர் பகுதியில் உள்ள மக்களுக்கு பைப் கம்போஸ்டிங் முறையின் பயன்பாடுகள், மற்றும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

அதன்படி, மாநகர் முழுவதும் இந்த முறை அமல்படுத்தப்பட்டு, பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கும் நிலையில் மக்களுக்கு தேவையான இயற்கை உரம் தயாரிக்க முடியும். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பைக் கம்போஸ்டிங் முறையினை செயல்படுத்த அந்தந்த பகுதி சுகாதார ஆய்வாளர் அல்லது மேற்பார்வையாளரை தொடர்பு கொள்ளலாம் என, மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Updated On: 6 Oct 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு